நகைச்சுவை நாடகம்
நிகழ்ச்சி தொகுப்பாளர்: வணக்கம் and WELCOME to தமிழகத்தின் பிரம்மாண்டமான கேம் ஷோ வெல்லுங்கள் ஒரு சோப்.
என் கிட்ட சோப் இருக்கு குளிக்க நீங்க தயாரா? பல வருஷங்களா குளிக்காம இருக்கறவங்கள sms போட்டியில select பண்ணி அவங்களுக்கு ஓணான் மார்க் குளியல் சோப் தந்து இனியும் குளிக்காம இருந்தா நல்லதில்லன்னு சொல்றதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.இது வெறும் கேம் ஷோ இல்ல,
ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:சரி,நம்ம போட்டியாளர்கள்ல ரொம்ப நாளா குளிக்காம இருந்தவர் யாருன்னு நம்ம தடவியல் நிபுணர் தடம் தாமு ஒரு பட்டியல் கொடுத்து இருக்கார், இந்த பட்டியல் படிதான் நாம இன்னைக்கு கேம விளையாடப் போறோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Let's call our first contestant தேமல் ப்ரியன்
நிகழ்ச்சி தொகுப்பாளர்:வாங்க Mr.தேமல் ப்ரியன், எப்படி ஃபீல் பண்றீங்க?
தேமல் ப்ரியன்:என்னை விட என் குடும்பத்தார்தான் நான் இந்த போட்டியில
கலந்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க
நிகழ்ச்சி தொகுப்பாளர்:பின்ன எத்தனை நாளைக்குத்தான் அவங்க கப்ப தாங்குவாங்க.
சரி வாங்க விளையாடலாம்.இந்த போட்டியில மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்.
ஓவ்வொரு கேள்வியின் முடிவிலயும்
உங்கள குளிக்க ஊக்கப்படுத்த Deodrant,Powder,Shampoo,Towel மற்றும் உச்சக்கட்ட பரிசாக ஒரு
சோப் வழங்கப்படும்.போட்டிக்குத் தயாரா?
தேமல் ப்ரியன்:ரெடி சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:மற்றும் உங்களுக்கான Lifelines,1/2:1/2-சீட்டு குலுக்கி-Msg a Friend.
முதல் கேள்வி-ஆஸ்கர் விருது எதற்காக கொடுக்கப்படுகிறது?
A.நல்லா சாப்டதுக்காக B.அதிகமா அடி வாங்குனதுக்காக
C.அதிக நாள் குளிக்காம் இருந்ததுக்காக D.சினிமாவுக்காக
தேமல் ப்ரியன்:I think CCCCCC.....
நிகழ்ச்சி தொகுப்பாளர்:அட நல்லா ராகம் போடறீங்களே
தேமல் ப்ரியன்:Yes I got it,ராகம்,Music.Option D சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Computer Lock D.Very Good, சரியான விடை. You win a Deodrant.
அடுத்த கேள்வி-இலவச லேப்டாப் வேலை செய்யலனா என்ன பண்ணுவீங்க?
A.Service பண்ணுவேன் B.Hospital-ல admit பண்ணுவேன்
C.கொசு மருந்து அடிப்பேன் D.சாணி பூசி கோலம் போடுவேன்
தேமல் ப்ரியன்:என் பையனுக்கு இன்னும் கிடைக்கல சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:பரவாயில்ல கிடைச்சா என்ன பண்ணுவீங்க.
தேமல் ப்ரியன்:Option A சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Correct Answer.கிட்ட வாங்க(முகர்ந்து பார்த்த பின்)
Oh No! நீங்க குளிச்சுட்டு வந்திருக்கீங்க.You are rejected.தடம் தாமுவையே
ஏமாத்திட்டியே.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:நம்ம பட்டியல்ல இருக்கும் அடுத்த போட்டியாளர் சிரங்கு சொரியன்.
Welcome Mr.சிரங்கு சொரியன்.குளிச்சு எத்தனை நாள் ஆச்சு?.
சிரங்கு சொரியன்:28 நாள் ஆச்சு சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Oh! WOW......உங்களுக்கான கேள்வி,
ஞாபகமறதிகாரங்க என்ன பண்ணுவாங்க
A.செருப்ப பீட்சான்னு நினைச்சு சாப்பிடுவாங்க B.காதுக்கு போடுற Buds-அ வாயில போடுவாங்க
C.அவசரத்துக்கு பக்கத்து வீட்டுக்கு போயிடுவாங்க
சிரங்கு சொரியன்:சாரி சார் மறந்துட்டேன்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:WOW! நான் கேள்விய முடிக்காததுக்கு முன்னாடியே பதில சொல்லிட்டீங்களே, சரியான விடை.உங்களுக்கு ஒரு Deodrant பரிசு
இதன் மூலமா நீங்க குளிக்கலங்கறத யாரலயும் கண்டுபிடிக்க முடியாது.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:ஜாக்கிசான் எங்கே கராத்தே கத்துக்கிட்டார்?
A.சௌகார்பேட்டை B.அண்ணாநகர்
C.சைதாப்பேட்டை D.ஹாங்காங்க்
சிரங்கு சொரியன்:இவ்வளவு கஷ்டமா வெளிநாட்டுக்காரங்கப் பத்தியெல்லாம்
கேட்கறீங்களே சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:அதுதானே உண்மையான போட்டி, Lifeline
பயன்படுத்தீறீங்களா?
சிரங்கு சொரியன்:OK சார்,சீட்டு குலுக்கி Lifeline.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: சீட்டு குலுக்கல்ல வந்துள்ள விடை Option C.
சிரங்கு சொரியன்:நான் C Select பண்றேன் சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Computer Spray C.நீங்க ஒரு Powder டப்பா ஜெயிச்சு இருக்கறீங்க.
அடுத்த கேள்வி, இவற்றுள் எந்த ராகத்தை பாடினால் மழை வரும்?
A.அடானா ராகம் B.கரகரப்பிரியா ராகம்
C.ஹன்சிகா மோத்வானி ச்சீ ஹம்சத்வனி D.அமிர்தவர்ஷினி
சிரங்கு சொரியன்: Sir, I will SMS a Friend
நிகழ்ச்சி தொகுப்பாளர்: சரி போட்டி விதிப்படி,நீங்க வெறும் 20 எழுத்துக்கள்ள மெசேஜ் அனுப்பனும்
சிரங்கு சொரியன்: Msg:உன் பேரு அர்த்தம் என்ன?
Reply D மழை என்று வந்தது
சிரங்கு சொரியன்:D சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:சரியான விடை நீங்க Shampoo ஜெயிச்சு இருக்கறீங்க.
உங்களுக்கான அடுத்த கேள்வி
இவற்றுள் எது Washing Machine?
A.Sharukh khan B.Videocon C.Salmankhan D.Popcorn
சிரங்கு சொரியன்:என்ன சார், மறுபடியும் கஷ்டமான கேள்வியா கேட்கறீங்க, Lifeline சார்
நிகழ்ச்சி தொகுப்பாளர்:உங்களோட கடைசி Lifeline 1/2:1/2. Computer do 1/2:1/2
உங்களுக்கு மிச்சமிருக்கறது B.Videocon D.Popcorn
சிரங்கு சொரியன்:Pop... இல்ல Videocon சார்
நிகழ்ச்சி தொகுப்பாளர்:சரியான விடை.நீங்க ஒரு Towel ஜெயிச்சு இருக்கறீங்க
நிகழ்ச்சி தொகுப்பாளர்:நிகழ்ச்சியோட கடைசி கட்டத்துக்கு வந்துட்டோம், அடுத்த கேள்வி
உச்சகட்ட பரிசான சோப் கேள்வி.எப்படி ஃபீல் பண்றீங்க.
சிரங்கு சொரியன்:ரொம்ப மகிழ்ச்சியா சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:உங்களுக்கான கேள்வி,
அரசமன்னன் என்ன கட்டினார்?
A.மண்டபம் B.கலாசாலை C.வேட்டி D.லுங்கி
சிரங்கு சொரியன்:சார் அது வந்து,லுங்கியா வேட்டியான்னு ஒரே குழப்பமா இருக்கு சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:நல்லா யோசிச்சு சொல்லுங்க, உங்களுக்கு Lifelineகூட எதுவும் இல்ல.
உங்கள சுத்தி இருக்கறவங்களோட வாழ்க்கைய மாத்தப் போற கேள்வி இது.
சிரங்கு சொரியன்:சார் Inky pinky போட்டதுல கலாசாலா வருது சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Are you confident?
சிரங்கு சொரியன்:கடவுள் தான் காப்பத்தணும்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:Congrats, அருமையான ஓணான் மார்க் சோப் ஜெயிச்சு இருக்கறீங்க.
இந்தாங்க சோப்.ஒழுங்கா குளிக்கனும் சரியா?.
சிரங்கு சொரியன்:சரி சார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்:நன்றி நேயர்களே.மீண்டும் சந்திப்போம் இது தமிழகத்தின்
பிரம்மாண்டமான கேம் ஷோ, வெல்லுங்கள ஒரு சோப்.
