கதாநாயகன் அவரது தம்பி,தங்கைகள் வாழ்க்கைச் சக்கரத்தில் தங்கள் பால்யபருவத்தில் பல துன்பங்களுக்குட்பட்டு வளர்கிறார்கள் என்னும் காட்சியில் பருவ மாற்றங்களுக்கேற்ப பல குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுவார்கள்.இதெல்லாம் ஒரு காலத்தில், நான் பார்த்தவரையில் ஸ்லம்டாக் மில்லியனரில் தான் இவ்வாறு நேர்த்தியாக குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளித்து இருந்தனர்.இப்போது நிலைமை?.
குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மணிரத்னம்
தவிர இங்கு அனைவரும் கதாநாயகர்களையே குழந்தைகளாக
மாற்றி பள்ளி சீருடை அணியச் செய்கிறார்கள்.இவர்கள்
பள்ளிச் சீருடையில் தோன்றி என்று குழந்தைகளுக்கு
நல்ல முன்னுதாரணமாக நடிக்கிறார்களோ,அன்று பெற்றோர்
மகிழ்வர்.பள்ளிச்சீருடை புனிதமானது,அதை அணிந்து கொண்டு
குழந்தைகளை திசை மாற்றாதீர்கள்.